பாலாறு பாலத்தில் மணல் குவியலால் அச்சம்

65பார்த்தது
பாலாறு பாலத்தில் மணல் குவியலால் அச்சம்
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஆற்பாக்கத்தில், கல் அரவை ஆலைகளில் தயாரிக்கப்படும் எம். சாண்ட் எனப்படும் மணல், லாரி வாயிலாக களக்காட்டூர், குருவிமலை, ஓரிக்கை பாலாறு பாலம் வழியாக பல்வேறு ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

லாரிகளில் இருந்து சிதறிய எம். சாண்ட் மணல், ஓரிக்கை பாலாறு பால சாலையோரம் குவியலாக உள்ளது.


இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் மணல் குவியலில் சிக்கி விபத்துக்கு உள்ளாகின்றனர்.

மேலும், பாலத்தில் மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள துளையில் மணல் குவியலால் அடைப்பு ஏற்பட்டு, மழையின்போது பாலத்தில் மழைநீர் தேங்கும் சூழல் உள்ளது.

எனவே, ஓரிக்கை பாலாறு பால சாலையோரம் குவிந்துள்ள எம். சாண்ட் மணலை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி