பாரதியார் தின மற்றும் குடியரசு தின கைப்பந்து போட்டி

59பார்த்தது
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தின மற்றும் குடியரசு தின கைப்பந்து போட்டியினை கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் துவக்கி வைத்தார்.

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தின மற்றும் குடியரசு தின கைப்பந்து போட்டி திருப்போரூர் ஒன்றிய கோவளம் ஊராட்சியில் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் ஷோபனா சுந்தர், கேளம்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கைப்பந்து போட்டியினை துவக்கி வைத்தனர் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 14 வயது 17 வயது 19 வயது என தனித்தனியே அணிகள் பிரிக்கப்பட்டு 228 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றனர் முதலாவதாக பெண்களுக்கான போட்டியாக இன்றைய தினம் திண்டுக்கல் அணியும், பெரம்பலூர் அணியும் மோதுகின்றனர் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாணவியர் விளையாடி வருகின்றனர், நான்கு நாட்கள் நடைபெற உள்ள போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செங்கல்பட்டு மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி துணையோடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது, நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் அமலோற்பவராஜ் தலைமை ஆசிரியை சந்தனமேரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருவளர் செல்வம், சென்னை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர், பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோருடன் வார்டு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி