"மின் இணைப்பு பெற முடியாமல் 15 ஆண்டாக இருளில் தவிப்பு

61பார்த்தது
"மின் இணைப்பு பெற முடியாமல் 15 ஆண்டாக இருளில் தவிப்பு
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் ஊராட்சியில் தொல்லியல் துறை சார்ந்த நிலம் உள்ளது. இதில் 150க்கும் மேற்பட்ட ஏழை குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மின் இணைப்பு வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர். மின் இணைப்பு பெறுவதற்கு தொல்லியல் துறை மற்றும் வருவாய் துறை சார்ந்த தடையில்லா சான்று தேவைப்படுகிறது. இதற்காக, அப்பகுதி மக்கள், செங்கல்பட்டு மாவட்டம் உருவானதில் இருந்து, மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நெல்லிக்குப்பம் ஊராட்சியில் நடக்கும் கிராம சபை கூட்டத்திலும் பொதுமக்கள் வலியுறுத்தி பேசினர். இதன் விளைவாக, தற்போதைய ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி, அங்கு வீடு கட்டி மின் இணைப்பு இல்லாமல் உள்ள குடும்பங்களின் விபரங்களை சேகரித்து, மத்திய அரசின் நிதி மற்றும் தொல்லியல் துறை, மின் துறை அமைச்சரை அணுகுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதை தொடர்ந்து, பிரதமர் அலுவலகம், தொல்லியல் துறை மற்றும் மின்சாரத்துறைக்கு மின் இணைப்பு தொடர்பான கோரிக்கை மனுவை தபால் வாயிலாக அனுப்பி உள்ளார்.

தொடர்புடைய செய்தி