மதுராந்தகம் அருகே பழங்குடியினர் வீடு கட்டும் பணி நிறுத்தம்

65பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையனூர் கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக 12-இருளர் சமூகத்தினர் குளக்கரை மீது குடிசை வீடு அமைத்து வசித்து வந்தனர்.
இந்த இருளர் இன மக்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் என தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை மனு அளித்தனர்.
இந்த மனு அடிப்படையில்12 இருளர் இன
குடும்பத்தினருக்கு பழங்குடியினர் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2022- 23 ஆம் ஆண்டு இவர்களுக்கு

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சர் தா. மோ அன்பரசன் அவர்கள் இந்த இருளர் இன குடும்பத்தினருக்கு நேரடியாக பட்டா வழங்கி வீடு கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து
கடந்த ஆண்டு இந்த வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டது.


இந்த நிலையில் இருளர் இன மக்களுக்கு வழங்கப்பட்ட இடம் களம் புறம்போக்கு இடம் என்று அதே பகுதியை சேர்ந்த நரேஷ் குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.


இதன் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக இந்த வீடுகள் கட்டும் பணி 20% மட்டுமே நடைபெற்றுள்ளதாக அப்பகுதி இருளர் இன மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தற்பொழுது மழைக்காலம் என்பதால் எங்களுக்கு உடனடியாக வீடு கட்டித் தர வேண்டும்என அப்பகுதி இருளர் இன மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி