சொர்ணவாரி சாகுபடி பணி உத்திரமேரூரில் தீவிரம்

69பார்த்தது
சொர்ணவாரி சாகுபடி பணி உத்திரமேரூரில் தீவிரம்
காஞ்சிபுரம் மாவட்டம்
உத்திரமேரூர் வட்டார மொத்த நிலப்பரப்பில், 70 சதவீதம் விவசாய நிலங்கள் உள்ளடங்கியதாக உள்ளன.

இங்குள்ள விவசாயிகள், ஏரி பாசனம், கணற்று பாசனம் மற்றும் ஆற்று பாசனம் மூலம் சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களிலும், பெரும்பாலும் நெல் பயிரிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த பருவமழையை தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் நவரைப்பட்ட நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு, உத்திரமேரூர் ஒன்றியம் முழுக்க 27, 000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிட்டனர்.

அப்பயிர்களில், தற்போது 90 சதவீதம் அறுவடை செய்யப்பட்ட நிலையில், அடுத்த போகமான சொர்ணவாரிபட்ட சாகுபடி பணிகளில், விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கிணற்று பாசனம் மற்றும் ஏரிகளில் நீர் இருப்பைக் கொண்டு, விவசாயிகள் சாகுபடி பணிகளை துவக்கி உள்ளனர்.

நடப்பாண்டு சொர்ணவாரி பட்டத்திற்கு உத்திரமேரூர் வட்டாரத்தில் இதுவரை 650 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளதாக உத்திரமேரூர் வட்டார வேளாண் இணை இயக்குனர் முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :