"சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா

55பார்த்தது
"சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா
காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம், பல் மருத்துவ சங்கம் மற்றும் நுாமெட் ஆய்வகம் சார்பில், 2023ம் ஆண்டிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், 2024 ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில், 'பிரிசிஷன் - 2024' என்ற இசை இரவு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

காஞ்சிபுரம் எஸ். பி. , சுதாகர் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் மனோகரன் வரவேற்றார்.

சென்னை வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் சண்முகப்ரியா, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் கோபிநாத், துணை இயக்குநர் டாக்டர் பிரியாராஜ், டாக்டர் ஜீவரத்தினம் ஆகியோர் சாதனையாளர்களுக்கு விருது வழங்கினர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி