கால்நடைகளுக்கு ஜூன் 10ல் கோமாரி தடுப்பூசி

575பார்த்தது
கால்நடைகளுக்கு ஜூன் 10ல் கோமாரி தடுப்பூசி
பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி மூலம், விவசாயிகளுக்கு கால்நடை இறப்பு ஏற்படுகிறது. இதனால், பொருளாதார இழப்பும் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது.

பால் உற்பத்தி கடுமயைாக குறைந்து மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, தடுப்பூசி செலுத்துவது அவசியமாகிறது.

இந்நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. காஞ்சிபுரம், மாவட்டத்தில் உள்ள, 1, 69, 200 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், ஐந்தாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி, ஜூன் 10 முதல், 21 நாட்கள் நடைபெற உள்ளது.

எனவே, கால்நடை விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களில், பசு, எருமை, எருதுகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி