அரசு பள்ளி தனியார் பங்களிப்புடன் நவீன கழிப்பறை திறப்பு விழா

64பார்த்தது
கோவளம் அரசு பள்ளி தனியார் பங்களிப்பு 1 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 வகுப்பறைகள் மற்றும் நவின கழிவறையை அமைச்சர்கள் அன்பில்மகேஷ் மற்றும் தா. மோ. அன்பரசன் ஆகியோர் மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்


செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ். டி. எஸ். பவுண்டேசன், ரவுண்ட் டேபிள் இந்தியா ஆகிய தொண்டு நிறுவனங்கள் சார்பில் 1 கோடியே 23 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட 4 வகுப்பறைகள், ஆண் பெண் என இருபால் மாணவர்களுக்கான அதிநவீன கழிவறை ஆகியவற்றை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் ஆகியோர் திறந்து வைத்தனர்,

மாணவிகளுக்கான கழிப்பிடத்தை பார்வையிட்டு தொண்டு நிறுவன செயல்பாட்டை பாராட்டினார்.

கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், காஞ்சிபுரம் எம். பி செல்வம், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பாலாஜி, சேர்மன் இதயவர்மன், எஸ். டி. எஸ். பவுண்டேசன் நிறுவனர் சுந்தர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்,

தொடர்புடைய செய்தி