இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு கூட்டம்

55பார்த்தது
மாமல்லபுரம் அருகே இயற்கை வேளாண்மை குறித்து கருத்து பரிமாற்றம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

சென்னை தரமணியில் இயங்கி வரும்
முருகப்ப செட்டியார் ஆராய்ச்சி மைய நிறுவனமானது விவசாயம் சார்ந்த தொழில்நுட்பம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுடன் இணைந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் கருத்து பரிமாற்றம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடியில் உள்ள முருகப்ப செட்டியார் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை முறையை ஊக்கப்படுத்துவதற்காக, வேளாண் துறையில் இயந்திரங்களின் மேம்பாட்டை குறித்தும் வேளாண் துறை வழியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் பயிர் செய்ய நிலம் உழுவதிலிருந்து அறுவடை செய்வது வரை உள்ள அரசு திட்டங்கள் குறித்தும் மண் பரிசோதனை மற்றும் மண் மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது, இடுபொருட்கள் உற்பத்தி செய்யும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் கூட்டத்தில் நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தனர்,

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி