வியாபாரிகள் சங்கம் சார்பில் 25 வகை பழங்களுடன் சீர்வரிசை

59பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் பிரசித்திப்பெற்ற சிவஸ்தலமாகும்.
இச்சிறப்பு மிக்க இவ்வூரில் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக  கொண்டாடப்படுகிறது. அவ்வாறு கடந்த 13 ஆம் தேதி மாலை விநாயகர் உற்சவத்துடன் 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் முதல் நாள் உற்சவம் துவங்கி கடந்த 16 ஆம் தேதி, 63 நாயன்மார்கள் கிரிவலம் நடந்ததையடுத்து, முக்கிய பிரதான விழாவான 7 ஆம் நாள் தேர்திருவிழா 20 ஆம் தேதி விமரிசையாக நடந்தது இந்நிலையில் திருவிழாவின் 10ஆம் நாள் உற்சவமான 10 தலை இராவனேஸ்வர மலை வலஉற்சவத்துடன் இன்று காலை மலை கோயிலில் ஏற்றப்பட்ட சித்திரை திருவிழா கொடி இறங்கிய நிலையில் திருக்கழுக்குன்றம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் 11 ஆம் நாள் உற்சவம் இன்று நடைபெறுகிறது. அதன் துவக்கமாக திருக்கழுக்குன்றம் சன்னதி தெரு - சங்கு தீர்த்த குளக்கரையருகே அமைந்துள்ள வியாபாரிகள் சங்க அலுவலகத்திலிருந்து சங்க தலைவர் அழகேசன், செயலாளர் சா. சந்திரன், பொருளாளர் நேதாஜி ஆகியோர் முன்னிலையில் 25 வகை பழதட்டுகளுடன் சுவாமிக்கு மங்கள வாத்தியத்துடன் பேண்டு வாத்தியம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டு சர்வ வாத்திய மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் முன் வரிசை வைக்கப்பட்டது.