ஏரிகளின் நீர் இருப்பை கண்காணிக்கும் நீர்வளத்துறை

65பார்த்தது
ஏரிகளின் நீர் இருப்பை கண்காணிக்கும் நீர்வளத்துறை
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் கலங்கல், மதகு, கரை உள்ளிட்டவற்றை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்வர்.

கோடை காலம் துவங்கிய நிலையில், கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. இதன் காரணமாக, ஏரியில் உள்ள தண்ணீர் வேகமாக வறண்டு வருகிறது.

கடந்த நவம்பர், டிசம்பரில் பெய்த கனமழை காரணமாக நிரம்பிய ஏரிகள் பலவும் வறண்டு வருகிறது. ஏரிகளில் தண்ணீர் குறைந்து வருவதால், அடுத்து வரும் சம்பா, சொர்ணாவாரி பருவங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என, விவசாயிகள் கவலைபடுகின்றனர்.

நீர்வள ஆதாரத்துறையினர், ஏரியில் உள்ள தண்ணீர் இருப்பு பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர். ஏரியில், 75 சதவீதம், 50 சதவீதம், 25 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ள ஏரிகள் பற்றிய விபரங்களை நீர்வளத் துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.