அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்

76பார்த்தது
திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை அமைச்சர் தா. மோ. அன்பரசன் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் கலந்து கொண்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகளின் பயன்பாட்டிற்க்கு திறந்து வைத்தார், இந்த நிகழ்ச்சியில்
திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர். டி. அரசு, முன்னாள் எம்எல்ஏவும் வடக்கு ஒன்றிய செயலாளருமான வீ தமிழ்மணி மாவட்ட கவுன்சிலர் ஆர் கே ரமேஷ் தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார் திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா உட்பட துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி