செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையக் கட்டிடத் திறப்பு விழா ஊராட்சி மன்றத் தலைவர் தாரா சுதாகர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றி வைத்தும் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர்.
முன்னதாக படூர் ஊராட்சிக்கு வருகை தந்த மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் மற்றும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோருக்கு அங்கன்வாடி குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கேளம்பாக்கம் ஊராட்சியில் வட்டாரச் சுகாதார அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா ஊராட்சி மன்றத் தலைவர் ராணி எல்லப்பன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர்.
நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி, காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போரூர் ஒன்றியச் சேர்மன் எஸ்.ஆர்.எல். இதயவர்மன் சார், ஆட்சியர் நாராயணசர்மா, கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.