பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியம் பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு பெருந்தலைவர் ஒரத்தி கண்ணன்
அச்சரப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.
இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம் கண் மருத்துவம் பல் மருத்துவம் மகளிர் மருத்துவம் குழந்தை மருத்துவம் என சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர் மேலும் டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சத்தான உணவுகள் ஒன்பது குறித்த உணவு விளக்கம் குறித்த செயல்முறை செய்து காண்பிக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் 750க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன.