செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற சிவஸ்தலமாகும். இத்திருக்கோயிலின் மலை கோயிலின் அருள்மிகு வேதகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில் கிரிவலப்பாதையை சுற்றி பௌர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக கிரிவலம் செல்கின்றனர். இவ்வாறு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு ஆங்காங்கே ஆன்மீக அன்பர்கள் அன்னதானம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கிரிவலப் பாதையில் நாள்தோறும் தேங்கும் குப்பைகளுடன் அன்னதானத்திற்கு வழங்கப்படும் தட்டு கழிவுகளும் சேர்வதால் நாள்தோறும் குப்பைகள் அதிகமாக தேக்கமடைகின்றன. மேலும் நேற்று கிரிவலம் என்பதால் குப்பைகள் அதிகமாக குவிந்தன. இதனை அகற்றும் விதமாக திருக்கழுக்குன்றம் பேரூராட்சி சேர்மன் யுவராஜ் துரை உடனடி நடவடிக்கை மேற்க்கொண்டு பேருராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தண்டரை ஆசான் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் என 200 பேர் கிரிவல பாதையை தூய்மை படுத்தும் பணியினை துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர் தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொண்டனர் அகற்றப்படும் குப்பைகள் உடனுக்குடன் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டன நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் அருள்மணி சமூக ஆர்வலர் சரவணன் கல்லூரி பேராசிரியர் பெருமக்கள் என பலர் உடனிருந்தனர்.