மலேசியாவில் கராத்தே போட்டியில் பதக்கம்

63பார்த்தது
*"மலேசியாவில் நடந்த கராத்தே போட்டி - தமிழ்நாட்டில் இருந்து பங்குபெற்ற அனைத்து வீரர் வீராங்கனைகளும் பதக்கங்களை வென்று அசத்தல். "*

மலேசியாவில் உள்ள இப்போ சிட்டி நகரத்தில் நடந்த 20 ஆவது சர்வதேச ஓகினாவா கராத்தே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 36 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

கடந்த 10 நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில் 15க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து கராத்தே போட்டியில் பக்குபெற்ற 36 பேரும் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

குறிப்பாக 16 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் என 36 பதக்கங்களை தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் வென்றுள்ளனர்.

தொடர்ந்து இன்று தாயகம் திரும்பிய அவர்களுக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து அவர்களது பயிற்சியாளர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பதக்கம் வென்ற சங்கீதா என்ற இளம்பெண்.

கடந்த ஆறு மாதங்களாக கடும் பயிற்சி மேற்கொண்டோம் இந்த நிலையில் மலேசியாவில் நடந்த கராத்தே போட்டியில் நாங்கள் அனைவரும் பங்கு கொண்டு வெற்றி பெற்றுள்ளோம் அனைவரும் பதக்கங்களை பெற்றுள்ளது சந்தோஷமாக உள்ளது என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி