விவசாய நிலத்தில் சாய்ந்த நிலையில் மின்கம்பம்

52பார்த்தது
விவசாய நிலத்தில் சாய்ந்த நிலையில் மின்கம்பம்
காஞ்சிபுரம் மாவட்டம்
உத்திரமேரூர் ஒன்றியம், புள்ளம்பாக்கத்தில் இருந்து, திருமுக்கூடல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோர இருபுறங்களிலும், பல ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன.

இங்குள்ள விவசாய நிலங்களில் மின் இணைப்புக்காக மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதில், செய்யாற்று நீர் மடுவு அருகிலான விவசாய நிலம் ஒன்றில் நடப்பட்டுள்ள மின்கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. காற்று, மழை நேரங்களில் இந்த மின்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

இதேபோன்று, அப்பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள மற்றொரு மின்கம்பம், அதன் நடுப்பகுதியில் சிமென்ட் காரை உதிர்ந்து, கம்பிகள் வளைந்து உடைந்து விடும் நிலையில் காணப்படுகிறது.

எனவே, சாய்ந்த நிலையிலான மின்கம்பம் மற்றும் உடையும் நிலையில் உள்ள மின் கம்பத்தை முன்னெச்சரிக்கையாக சீரமைப்பு பணி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி