விமான நிலையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது

71பார்த்தது
பஞ்சாப் மாநிலத்தில் குற்ற வழக்குகளில் சிக்கி, 6 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர், சென்னையில் இருந்து, விமானம் மூலம் பஹ்ரைன் நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் கைது.

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து, நேற்று அதிகாலை புறப்பட தயாராகிக் கொண்டு இருந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள், பரிசோதித்து, பயணிகளை விமானத்தில் ஏறுவதற்கு அனுப்பி கொண்டு இருந்தனர்.

மேலும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரவி சிங் (31) என்பவர், இந்த விமானத்தில் அபுதாபி வழியாக பஹ்ரைன் நாட்டிற்கு செல்வதற்கு வந்தார். அவருடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்த போது, இவர் பஞ்சாப் மாநில போலீசால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரிய வந்தது.

இதை அடுத்து பயணி ரவி சிங் பயணத்தை ரத்து செய்த குடியுரிமை அதிகாரிகள், அவரை தனி அறையில் வைத்து விசாரித்தனர். அப்போது இவர் மீது, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, பஞ்சாப் மாநில காவல் நிலையத்தில், குடியிருக்கும் வீட்டுக்குள் புகுந்து, அடித்து உடைத்து சேதப்படுத்தியதோடு, பொருட்களை திருடியதாகவும், இரு பிரிவுகளில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் ரவி சிங், போலீசில் சிக்காமல் தொடர்ந்து, தலைமறைவாக இருந்து வந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி