உளுந்துார்பேட்டை அடுத்த ஈஸ்வரகண்டநல்லுார் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர், திருநாவலுார் அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.
நேற்று காலை 11: 30 மணியளவில் வகுப்பறையில் இருந்தபோது, ஆசிரியர் ஒருவரை அம்மாணவர் பட்டப்பெயர் வைத்து கூப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை ஆசிரியர் அடித்துள்ளார். இது குறித்து மாணவர் தெரிவித்த தகவலின் பேரில் பெற்றோர் பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் அடித்ததால் மயக்கம் வருவதாக கூறிய மாணவர், அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். தகவல் அறிந்த டி. எஸ். பி. , பிரதீப், திருநாவலுார் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்று, இரவு 7: 30 மணி வரை விசாரித்தனர். ஆசிரியரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
எனினும் இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்படவில்லை.