கள்ளக்குறிச்சி: மத்திய அரசை கண்டித்து CPM கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
கள்ளக்குறிச்சி: மத்திய அரசை கண்டித்து CPM கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அகில இந்திய அளவில் பிரச்சார இயக்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பூவராகவன், ஆனந்தன் தலைமையேற்று கண்டன உரையாற்றினார்கள். 

இதில் 'ஒரே தேசம் ஒரே தேர்தல்' திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கண்டித்தும், ரயில்வே உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப கோரியும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்றும், 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், நகராட்சிகளிலும் இத்திட்டத்தை அமலாக்க வேண்டும் என்றும் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், நகர செயலாளர் ஸ்டாலின், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், சீனிவாசன், ரீட்டா தேவி, தங்கராசு, கேக் சலாவுதீன் மற்றும் கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி