உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் சரக்கு லாரி விபத்து

78பார்த்தது
உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் சரக்கு லாரி விபத்து
கல்கத்தாவில் இருந்து இரும்பு மிளகாய் போன்ற சரக்குகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல்லை நோக்கிச் சென்ற லாரி இந்த லாரியை ஓட்டுநர் முருகவேல் இவர் மீனாட்சிபுரம் பரமக்குடி தாலுகா, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இயக்கி வந்தார். புறவழிசாலை செல்லும்போது முன்னால் சென்று கொண்டிருந்த இரும்பு பிளேட் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திடீரென உளுந்தூர்பேட்டை புறவழிசாலையில் இருந்து சர்வீஸ் சாலைக்குச் செல்வதற்காக பின்னோக்கி திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக முருகவேல் இயக்கி வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

முன்னால் ஒட்டிச் சென்ற வடநாட்டு லாரி ஓட்டுநர் பயத்தில் லாரியை வேகமாக முன்னோக்கிச் சென்று சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தினார். அப்போது முருகவேலும் அதே வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநரும் உதவி கேட்டு அந்த லாரியை நிறுத்தி போலீசிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் விபத்து நடுரோட்டில் ஏற்பட்டது. இந்த லாரியில் சமைப்பதற்காக வைத்திருந்த கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுவதற்கான அபாயம் ஏற்பட்டது. பெரும் விபத்தைத் தடுக்கும் நோக்கத்தில் அருகில் இருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு போலீசார் அந்தச் சிலிண்டரை எடுத்து தீ விபத்து ஏற்படாமல் தடுத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி