சுழன்று அடித்த சூறாவளி மரங்கள் வேருடன் சாய்ந்தது

60பார்த்தது
திருக்கோவிலூரில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் பேனர்கள், மரங்கள் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கோவிலூரில் நேற்று மாலை 4: 00 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து சூறாவளி காற்று சுழன்று அடித்தது. அரை மணி நேரம் நீடித்த காற்றில் திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் சாய்ந்தது. விளம்பர பதாகைகள் காற்றில் பறந்தது, இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்து நின்றனர்.

அரும்பாக்கம் அருகே திருக்கோவிலூர் - கள்ளக்குறிச்சி சாலையில் புளியமரம் ஒன்று சாய்ந்தது. இதன் காரணமாக அவ்வழிதடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் மின்கம்பம் சாய்ந்து மின் கம்பி அறுந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் பாதிப்பு ஏதுமில்லை.

இதேபோல் திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றை தொடர்ந்து 20 நிமிடம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி