எலவனாசூர் கோட்டை, கிராம அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. இந்நிகழ்வில் நேற்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் நடைபெற்றது. காலை 8:30 மணிக்கு, தேரில் அர்த்தநாரீஸ்வரர் சுவாமி வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரினை இழுத்தனர். இந்த நிகழ்வில், இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.