புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த எஸ் பி

56பார்த்தது
புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த எஸ் பி
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள வி. கூட்டுரோடு என்ற இடத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லை புற காவல் நிலையத்தினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சமய்சிங்மீனா இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். நடைபெற்ற இந்த புறக்காவல் நிலைய திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் ஜவகர்லால், கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதி வசந்த பாலா, சின்ன சேலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராமன், உதவி ஆய்வாளர் கார்த்திக் மற்றும் பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி