கள்ளச்சாராயம்: பார்வை பறிபோய் உயிரிழந்துள்ள சோகம்

81பார்த்தது
கள்ளச்சாராயம்: பார்வை பறிபோய் உயிரிழந்துள்ள சோகம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஐந்து பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்துள்ளதாக கூறப்படும் நிலையில், மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் பேசும் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காது கேட்காமல் போனதாகவும், அடுத்து கண் பார்வை பறிபோய் பின்னர் உயிர் போனதாகவும் கூறினர். இணை நோய் காரணமாக உயிரிழப்பு என்று அரசு தரப்பில் விளக்கம் அளித்திருந்த நிலையில், சிலருக்கு எந்தவித இணை நோய்களும் இல்லை என உறவினர்கள் கூறியுள்ளனர்.