"ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும்"

72பார்த்தது
"ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும்"
ஜூன் 25 ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், "ஜூன் 25, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சர்வாதிகார மனநிலையின் வெட்கக்கேடான வெளிப்பாடாக, தேசத்தின் மீது எமர்ஜென்சியை விதித்து நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார். எந்தத் தவறும் செய்யாமல் லட்சக்கணக்கான மக்கள் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டனர், ஊடகங்களின் குரல் அடக்கப்பட்டது. அதன் நினைவாக அவசர நிலையால் பாதிக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ல் அஞ்சலி செலுத்தப்படும்" என பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you