தொகுதி மறு வரையறை தொடர்பாக திமுக, இன்று (மார்ச் 22) சென்னையில் நடத்தும் கூட்டு நடவடிக்கை கூட்டத்தில் பங்கேற்க பஞ்சாப், கேரளா, தெலங்கானா முதலமைச்சர்கள் வந்துள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்தால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று திமுக கூறி வருகிறது. தன் கருத்தை வலியுறுத்தும் நோக்கில், ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளின் ஆதரவை திரட்டும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளது.