ஒரேடியாக படுகொலை செய்ய திட்டமா - ஜோதிமணி கேள்வி

564பார்த்தது
ஒரேடியாக படுகொலை செய்ய திட்டமா - ஜோதிமணி கேள்வி
தேர்தல் ஆணையர் ராஜினாமா குறித்து மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். இன்னும் சில தினங்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். இந்த அதி முக்கியமான காலகட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல், தனது பதவிக்காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தோல்வி நிச்சயம் என்கிற நிலையில் உள்ள பாஜக, ஏதேனும் பெரிய அளவிலான தேர்தல் முறைகேட்டிற்கு திட்டமிட்டுள்ளதா? அதற்கு உடன்பட விருப்பமில்லாமல் தேர்தல் ஆணையர் திடீரென ராஜினமா செய்துள்ளாரா? என்கிற கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்திய ஜனநாயகத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருந்த பாஜக ஒரேயடியாக படுகொலை செய்யத் திட்டமிடுகிறதா என்கிற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்ல. இந்த கவலைக்குரிய, நிச்சயமற்ற சூழலில் இந்தியா கூட்டணி எந்த சூழலுக்கும் தன்னை தயார் படுத்திக்கொண்டு, இந்த தேசத்திற்கான இறுதி யுத்தத்தை நடத்த வேண்டும். மக்கள் நிச்சயம் நம் பக்கம் நிற்பார்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி