இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணாமல் போன பலரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து, மீட்புப்படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டுஅருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். ஏற்கனவே, இந்த வார தொடக்கத்தில் வடக்கு சுமத்ரா மாகாணத்தின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளால் 20 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.