இந்திய குழந்தைகள் குற்றச்செயல்களை போற்றி வளரக்கூடாது- ஓவைசி

66பார்த்தது
இந்திய குழந்தைகள் குற்றச்செயல்களை போற்றி வளரக்கூடாது- ஓவைசி
இந்திய குழந்தைகள் குற்றச்செயல்களை போற்றி வளரக்கூடாது என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரது எக்ஸ் தள பதிவில், "NCERT பாபர் மசூதி என்ற வார்த்தைக்கு பதிலாக 'மூன்று குவிமாடம் கொண்ட அமைப்பு' என்று பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அயோத்தி தீர்ப்பை 'ஒருமித்த கருத்து' என்றும் குறிப்பிட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு ஒரு 'மிகப்பெரிய குற்றச் செயல்' என்று உச்சநீதிமன்றம் கூறியதை இந்திய குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும். 1949-ல் இயங்கி வந்த மசூதி மூடப்பட்டு, 1992-ல் ஒரு கும்பலால் இடிக்கப்பட்டது என்பதை இந்திய குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.