தமிழகத்தில் கடும் வெயிலால் முடங்கிய மாம்பழ விளைச்சல்

57பார்த்தது
தமிழகத்தில் கடும் வெயிலால் முடங்கிய  மாம்பழ விளைச்சல்
சேலத்தில் விளையும் மல்கோவா மாம்பழம் மிகுந்த சுவை மிகுந்தது. பெங்களூரா, அல்போன்சா, பங்கனப்பள்ளி, செந்தூரா, நடுச்சாலை, குண்டு, நீலம் உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் இங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜனவரி மாதத்தில் மழை இல்லாத வறண்ட வானிலை, கடந்த 2 மாதங்களாக நீடிக்கும் கடும் வெயில் காரணமாக மா பிஞ்சிகள் காய்ந்து உதிர்ந்துவிட்டன. இதனாலும் பூச்சி தாக்குதல் மற்றும் பருவம் தவறிய மழையால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் வியாபாரம் முடங்கியுள்ளதாக வியாபாரிகளும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி