சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சாதாரண உணவுகளை எடுத்துக்கொள்ளும் அளவு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு ஆளான மருத்துவர் பாலாஜி இன்னும் 2 நாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார். இதய பாதிப்பு அவருக்கு இருப்பதால் இதயவியல் சிறப்பு குழுவும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.