ஐசிசி சமீபத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையை வெளியிட்டது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்திய ரோகித் சர்மா 765 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார். ஷுப்மான் கில் (763), விராட் கோலி (746) மூன்று மற்றும் நான்காவது இடங்களில் உள்ளனர். அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டரும் 746 புள்ளிகள் பெற்று விராட் கோலியை சமன் செய்தார். அதேபோல், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.