நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும் ? டிஆர்பி ராஜா கேள்வி

85பார்த்தது
நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும் ? டிஆர்பி ராஜா கேள்வி
எடப்பாடி பழனிச்சாமி குறித்து திமுக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார் அவர் பேசுகையில், கட்சித் தலைவி வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும், கொள்ளையும் நடக்க விட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? பதவியைக் காப்பாற்றுவதற்காக பாஜகவுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் செய்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? தூத்துக்குடியில் மக்களைக் குருவிகளைப் போல சுட்டுத் தள்ளிய ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி