மீனவர்கள் வலையில் சிக்கிய பிரமாண்ட சிவலிங்கம் (வீடியோ)

67பார்த்தது
ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற குஜராத் மீனவர்களுக்கு 100 கிலோ எடையுள்ள பிரமாண்டமான சிவலிங்கம் கிடைத்தது. இச்சம்பவம் பருச் மாவட்டத்தில் உள்ள காவி கிராமத்தில் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது. முதலில், வலையில் ஏதோ கனமான பொருள் சிக்கியதாக நினைத்த மீனவர்கள், சிவலிங்கத்தைக் கண்டு வியந்தனர். சிவலிங்கத்தை கவனமாக படகில் ஏற்றி கரைக்கு கொண்டு சென்றனர். சிவலிங்கத்தின் மீது பாம்பு ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தை தரிசனம் செய்ய அப்பகுதி மக்கள் திரளாக திரண்டு வந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி