கிராம்பு எண்ணெய்யை பல் வலிக்கு பயன்படுத்தினால் நிவாரணம் கிடைக்கும். பஞ்சில் சில துளி கிராம்பு எண்ணெயை நனைத்து, 20-30 நிமிடங்கள் பாதிக்கப்பட்ட பல்லின் மீது வைத்து கொள்ளுங்கள். இதன்மூலம் வலி குறையும். வெதுவெதுப்பான உப்புநீரில் வாயை கொப்பளிக்கலாம். இதனால் வீக்கம் குறைந்து வலி மட்டுப்படும். பூண்டில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. ஒரு பல் பூண்டை நசுக்கி, அதில் உப்பு கலந்து, வலியால் பாதிக்கப்பட்ட பல்லில் நேரடியாக வைத்து கொள்ளுங்கள்.