அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருவரும் ஆஜராகாத நிலையில், வழக்கை வரும் மார்ச் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று, சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
சென்னையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அவர் சென்று விட்டதால், இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து வரும் மார்ச் 22ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.