தெலங்கான மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஓல்ட் டவுன் மிர்சௌக் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வீரர்கள், தீயில் சிக்கியவர்களை மீட்டனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதே தீ விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.