வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறிய பின்னர் நகரும் வேகம் அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெஞ்சல் புயலாக மாறியது. மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. தற்போது, சென்னையில் இருந்து தென் கிழக்கே 190 கி.மீ., தொலைவில் இந்த ஃபெஞ்சல் புயல் நிலை கொண்டுள்ளது. விரைவில் தமிழகத்தை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.