ததுப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் அவரது திரைப்படங்களில் ஆபத்தான சண்டைக்காட்சிகளில் ஈடுபடுவதுண்டு. அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஓடும் ரயிலில் தான் செய்த ஆபத்தான ஸ்டண்ட் வீடியோவை பதிவிட்டுள்ளார். ரயில் முன்னோக்கி செல்லும் போது அவர் அதில் இருந்து குதித்து, அதன் மேல் ஏறி அவர் ஓடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரது ஸ்டண்ட்களை கண்டு நெட்டிசன்கள் வியந்து போயுள்ளனர்.