24வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

71941பார்த்தது
24வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 24வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் 11ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜுன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், 266வது நாளாக அவர் சிறையில் இருந்து வருகிறார். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி