குற்றாலத்தில் மக்கள் குளிக்க தடை நீட்டிப்பு

61பார்த்தது
குற்றாலத்தில் மக்கள் குளிக்க தடை நீட்டிப்பு
தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் தேனி மாவட்டம் மேகமலை பகுதிகளில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கு விடுக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் பெய்த கனமழையால் அருவிகளில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டது. தற்போது தண்ணீர் குறைய தொடங்கியிருந்தாலும் வெள்ளப் பெருகினால் அடித்து வரப்பட்ட மரத்துண்டுகள், கற்கள் ஆகியவை அருவி இருக்கும் பகுதியில் குவிந்துள்ளன. அதனை அப்புறப்படுத்தும் பணிகள் முடியும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் மேகமலை அருவிகளிலும் நீர் வரத்து குறையும் வரை குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி