கிணத்தில் தவறி விழுந்த காட்டெருமை

58பார்த்தது
சத்தியமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த எருமை மாட்டை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அருகே உள்ள புது குய்யனூ சேர்ந்தவர் விவசாயி முத்துசாமி வனப்பகுதியை ஒட்டியுள்ள இவரது தோட்டத்து கிணற்றில் இரவு வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த காட்டு எருமை மாடு ஒன்று எதிா்பாராதவிதமாக சுமார் 100 ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. அதிகாலை கிணற்றில் இருந்து சத்தம் கேட்டு எட்டி பார்த்த போது உள்ளே காட்டு எருமை மாடு தண்ணீரில் தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மூலம் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கிணற்றில் விழுந்த எருமை மாட்டினை கிரேன் உதவியுடன் தீயனைப்பு துறையினர் மற்றும், வனத்துறையினர் மீட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு எருமை மாட்டை பத்திரமாக மீட்டனர். வனத்துறை டாக்டர் அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாரட்டு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி