திமுகவேட்பாளர்பிரகாஷ் மொடக்குறிச்சியில் பிரச்சாரம் செய்தார்

59பார்த்தது
திமுகவேட்பாளர்பிரகாஷ் மொடக்குறிச்சியில் பிரச்சாரம் செய்தார்
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று ஈரோடு திமுக வேட்பாளர் கே. இ. பிரகாஷ் உறுதியளித்துள்ளார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே. இ. பிரகாஷ் நேற்று மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சப்பாளி, நொச்சிபாளையம், செட்டிபாளையம், அசோக்நகர், வெள்ளாளபாளையம், 46புதூர், கருக்கம்பாளையம், லக்காபுரம், போக்குவரத்து நகர், நகராட்சி நகர், பெரியார் நகர், முத்துக்கவுண்டன்பாளையம், சின்னியம்பாளையம், சென்னப்ப நாயக்கன் பாளையம், சாவடிபாளையம், நஞ்சைஊத்துக்குளி, கோவிந்த நாயக்கன் பாளையம், குளூர், சாமிநாதபுரம், சாவடிபாளையம், பச்சாம்பாளையம், நொச்சிக்காட்டுவலசு, மணியம்பாளையம், மஞ்சக்காட்டுவலசு உள்பட 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர்களிடம் வேட்பாளர் கே. இ. பிரகாஷ் பேசியதாவது, ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைந்ததும் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். தொகுதி மக்களாகிய உங்கள் கோரிக்கைகள் நிறைவேற நாடாளு மன்றத்தில் நிச்சயம் குரல் கொடுப்பேன் என்பதோடு புதிய திட்டங்களை தொகுதிக்கு கொண்டுவர பாடுபடுவேன். இவ்வாறு பேசினார்.

தொடர்புடைய செய்தி