இயக்குநர் ரவிவர்மன் இரு இளைஞர்களிடமும் விசாரணை

76பார்த்தது
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வெங்கமேடு பகுதியில் கடந்த நவம்பர் 21ஆம் தேதி பொலவகாளிபாளையம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த தலித் இளைஞர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய பழங்குடியின ஆணைய இயக்குநர் ரவிவர்மன் இரு இளைஞர்களிடமும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் உள்ள வீடுகளில் வளர்த்து வந்த கோழிகளை திருடியதாக கடந்த 21 ஆம் தேதி இரண்டு இளைஞர்களை ஊர் பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்,
அவர்கள் மீது திருட்டில் ஈடுப்பட்டது தொடர்பான வழக்குபதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து கோழி திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள் மீது சிலர் சிறுநீர் கழித்தும் சாதி பெயரை குறிப்பிட்டும் அவதூறாக பேசியதாகவும் 20 பேர் மீது கடந்த நவம்பர் 24 ம் தேதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இரு இளைஞர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தேசிய ஆணைய இயக்குநர் ரவிவர்மன் இரு இளைஞர்களிடமும் சம்பவம் குறித்து விசாரணை நடத்த இருந்தார் அதனை தொடர்ந்து இன்று தேசிய பழங்குடியின ஆணைய இயக்குநர் ரவிவர்மன் பொலவக்காளிபாளையம் இந்திரா நகரில் உள்ள நவீன்குமாரிடமும், அதைத்தொடர்ந்து கோபி மணிமேகலை வீதியில் உள்ள கிருபாகரனிடமும் விசாரணை நடத்தினார்.

டேக்ஸ் :