"வி.சி.க., மாநாடு என்பது அரசுக்கு எதிரானது அல்ல"

70பார்த்தது
"வி.சி.க., மாநாடு என்பது அரசுக்கு எதிரானது அல்ல"
மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, துறை ரீதியாக ஆலோசித்து தான் முடிவு வெடுக்கப்படும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசியதாவது:

வி.சி.க., சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாடு என்பது அரசுக்கு எதிரானது அல்ல. அந்த மாநாடு என்பது தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் மாநாடு. எந்தக் கட்சி வேண்டுமானலும் கோரிக்கையை வைக்க மாநாடு நடத்தலாம். இதனை அரசியலாக தொடர்புப்படுத்தி, திமுகவை எதிர்ப்பதாக கொண்டு செல்வது தவறு.

இந்த மாநாட்டில் அரசுக்கு பின்னடைவு இல்லை. மதுவை இந்த அரசு திடீரென துவக்கியது அல்ல. இந்த அரசு மதுவை தொடங்கி, அதற்கு மாநாடு நடந்தால் அதுதான் பின்னடைவு. மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, துறை ரீதியாக ஆலோசித்து தான் முடிவு வெடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது, மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, விளையாட்டு அலுவலர் சதீஸ்குமார் உள்ளிட்டோர் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி