மகளிர் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம்

60பார்த்தது
மகளிர் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம்
ஈதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரியும் ஈரோடு மாவட்டத்திலுள்ள வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், அதிக பணிச்சுமை மற்றும் வேலைப்பளுவினை எதிர்த்தும், ஊதிய உயர்வு வழங்கிட வலியுறுத்தியும், பணி நியமனம் செய்யக் கோரியும் இன்று(செப்.30) ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. ராஜகோபால சுன்காராவிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி