காற்று ஒலிப்பானை அகற்றும் போக்குவரத்து போலீஸார்.

82பார்த்தது
தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பானை அகற்றும் போக்குவரத்து போலீஸார்.

சத்திய மங்கலத்தில் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் (ஏர்ஹாரன்) அகற்றப்பட்டன.

சத்தியமங்கலத்தில் இயங்கும் சில பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் டி. கண்ணன், போக்குவரத்து ஆய்வாளர் குருசாமி ஆகியோர் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். இதில், 50-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பொருத் தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், நடத்துநர், பேருந்து ஓட்டுநர்களை எச்சரித்தனர்.

காற்று ஒலிப்பான்களை பொருத்தி பேருந்துகள் இயக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று துணை போக்குவரத்து அலுவலர் மகேஷ்வரன் தெரிவித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி