தாளவாடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அறிவிப்பு.

66பார்த்தது
தாளவாடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அறிவிப்பு.
தாளவாடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அறிவிப்பு.

ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டார பகுதிகளில் காரிஃப் பருவத்தில் மானாவாரி மக்காச்சோளம் ராகி பயிரிட விவசாயிகள் தங்கள் நிலங்களில் அடியுரம் இடுவதற்கு தயாராகி வருகின்றனர். விவசாயிகள் டி.ஏ.பி உரத்துக்கு பதிலாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம். அம்மோனியம் பாஸ்பேட் சல்பேட் 15:15:15, 16:16:16, 18:26:26 காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தி மக்காச்சோளம், ராகி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யலாம்.

மேலும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்துவதால் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தும் போது அவற்றில் உள்ள பாஸ்பரஸ், சல்பர், கால்சியம் போன்ற கூடுதல் சத்துக்கள் கிடைக்கின்றன.

மண்ணில் டி.ஏ.பி உரம் ஏற்படுத்தும் உப்பு நிலையை விட சூப்பர் பாஸ்பேட் குறைவாகவே ஏற்படுத்துவதால் மண்வளம் ஒப்பிட்ட அளவில் நன்றாக நிலை நிறுத்தப்படுகிறது.

தாளவாடி வட்டாரத்தில் சுமார் 52 MT(மெட்ரிக் டன்) சூப்பர் பாஸ்பேட்டும், 165 MT(மெட்ரிக் டன்) காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என தாளவாடி வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி