ஈரோடு: சிக்கள்ளி வனப்பகுதியில் சாலையோரம் ஊர்ந்து வந்த மலைப்பாம்பு

54பார்த்தது
ஈரோடு: சிக்கள்ளி வனப்பகுதியில் சாலையோரம் ஊர்ந்து வந்த மலைப்பாம்பு
ஈரோடு மாவட்டம் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிக்கள்ளி வனப்பகுதியில் சாலையோரம் ஊர்ந்து வந்த மலைப்பாம்பால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக பயணிக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனப்பகுதியில் புலி, சிறுத்தை , மான் , கரடி, மலைப்பாம்பு உள்ளிட்ட வன உயிரினங்கள் அதிகமாக வசிக்கின்றன.
இந்த நிலையில் தாளவாடியில் இருந்து தலைமலை செல்லும் சிக்கள்ளி வனப்பகுதியில் நேற்று(அக்.28) இரவு சாலையோரம் ராட்சத மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மலைப்பாம்பு ஊர்ந்து சென்ற காட்சியை வீடியோ எடுத்தனர். இந்த வனப்பகுதி வழியாக பயணம் செய்யும் பயணிகள் எச்சரிக்கையாக பயணம் செய்யும்படி தாளவாடி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி